Saturday, 17 March 2018

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒருவழிப்பாதை..... திரும்பிப் பார்க்கலாம்..... ஆனால் திரும்பிப்போக முடியாது...

அதனால் கடந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் #மகிழ்ச்சியை நிரப்பிக்கொண்டு கடந்திடுங்கள்...!


Sunday, 15 October 2017

Nella Karuthu

🐒❤ ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும்.

❤ மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

❤ ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான்.

❤ 'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள்.

❤ அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.

❤ என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது.

❤ ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது.

❤ பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

❤ தோற்று  விடுவோமோ, எதையாவது, இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்.
அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.

❤ நம்புங்கள்! 'முயற்சி திருவினை ஆக்கும...🐒🐒


Friday, 13 October 2017

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

*2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.* 
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁


Thursday, 12 October 2017

தொட்டால்சிணுங்கி

தொட்டால்சிணுங்கி

தொட்டால்சிணுங்கி, பெயரைக்கேட்டாலே தெரிகிறதல்லவா, நாம் கண்ணால் காணும் உயிர்ப்புள்ள தன்மை கொண்ட தாவரம். எல்லா தாவரங்களுக்கும், மரங்களுக்கும் உயிர் உண்டு, அதனால்தான் அவை, வளர்ந்து, மலர்ந்து, காய் காய்த்து பழங்களைத் தந்து, மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.

ஆயினும், மனிதர்களின் தொடுதலில், அல்லது சற்று பெரிய அளவில் காற்று வீசினால் கூட, இலைகளை சுருக்கிகொள்ளும் குணம் படைத்த ஒரே தாவரம், தொட்டால்சிணுங்கி மட்டும்தான்.

ஆனால், இதன் முழுமையான பலன்கள் தெரியாததால், இந்தச்செடியை இதன் தொடுதலில் உள்ள அதிசயத்திற்காக மட்டும் நாம் நினைக்கிறோம், அல்லது சிறிய அளவிலான நட்பின் கிண்டல்களைக்கூட தாங்க முடியாதவர்களை, தொட்டால்சிணுங்கி என்று கூறி அவர்களை ஒதுக்கிவைக்கிறோம்,

மருத்துவ குணத்திலும், மனிதர்களின் மனத்தை செம்மைப்படுத்தவும் பயன்தரும் இந்த அரிய மூலிகையையும்தான்.
தொட்டால்சிணுங்கி செடி, நீர்ப்பாங்கான இடங்களில், ஆற்றங்கரை ஓரங்களில் எல்லாம் தானாக வளரக்கூடியது. மழைக் காலங்களில் தரையில் அடர்ந்து படரும் இந்தச்செடி, மிக நுண்ணிய காந்த ஆற்றல் கொண்ட தன்மைமிக்கது. மனிதர்களுக்கு உடல் பிணி மட்டுமல்லாமல், மனப்பிணியையும் போக்கும் ஆற்றல்மிக்கது.

தொட்டால்சிணுங்கி தெய்வீக மூலிகை.

தொட்டால்சிணுங்கி செடியை துளசி போல வீடுகளில் வளர்த்துவரலாம். வீடுகளில் எதிர்மறை சக்திகளை வெளியேற்றி, நேர் சக்தி எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல்மிக்கது.
தினமும் குளித்தவுடன், துளசிமாடம் சுற்றிவரும் பெண்கள் மற்றும் ஆண்கள், இந்த தொட்டால்சிணுங்கி செடியை பவ்யமாக, கோமாதா எனக் கொண்டாடும் பசுமாட்டை எப்படித் தொட்டு வணங்குவோமா, அந்த நிலையில், தொட்டு வணங்கிவர, இதன் உயிர் ஆற்றல், உடலில் நுண் அதிர்வலைகளாக ஊடுருவி, சில மாதங்களில் மனதில் உள்ள நச்சு எண்ணங்கள் எல்லாம் நீங்கி மனம் ஒரு நிலையில் சீராக இயங்க ஆரம்பிக்கும்.
அந்த சமயத்தில் நன்மை தரும் எண்ணங்கள் யாவும் வலிமையாகி, நினைத்தது எல்லாம் நல்லவண்ணம் நடக்கும்.

தொட்டால்சிணுங்கி வேரை, சித்த மருத்துவத்தில் உடல்பிணி மருந்தாகவும், மாந்தரீகத்தில் மனப்பிணி தீர்க்கவும்,இன்னல்கள் களையவும் பயன்படுத்துவர்.

தொட்டால்சிணுங்கியின் இலை மற்றும் வேர்கள் அதிக பலனும் சக்தியும்மிக்கது.

சிறு நீர் எரிச்சல் :

தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து, தினமும் காலையில் தயிரில் கலந்து சாப்பிட்டுவர, உடல் சூடு குறையும், அதனால் ஏற்பட்ட, சிறுநீர் எரிச்சல் குணமாகும். இலைப்பொடியை தினமும் இரவில் பாலில் கலந்து பருகிவரவேண்டும்.

தொட்டால்சிணுங்கி வேரை நன்கு நசுக்கி, தண்ணீர் விட்டு காய்ச்சி, தண்ணீர் மூன்றில் ஒரு பாகமாக சுருங்கியதும், அந்த நீரை தினமும் பருகிவர, பெரியவர்களுக்கு ஏற்படும் சிறுநீர் அடைப்பு போன்ற வியாதிகள் குணமாகும்.
இதுவே, உடல் தளர்ச்சி நீக்கி, உடலுக்கு வலுவும் தரும் ஊட்டக்குடிநீராகவும் பலன் தரும்.

சர்க்கரை பாதிப்புகள் நீங்க

தொட்டால்சிணுங்கி இலைகளை வெயிலில் உலர்த்தி, அதை அரைத்து பொடியாக்கி, அதேபோல தொட்டால்சிணுங்கி வேரையும் வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு, அரை தேக்கரண்டி அளவு தினமும் இருவேளை சாப்பிட்டுவர, சர்க்கரை பாதிப்புகள் விலகும்.
இந்தக்கலவையையே, பாலில் கலந்து வருகிவர, மூல வியாதிகள் சரியாகும்.

வீக்கம் குறைய :

வீக்கங்கள் கரைய தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து பற்று போல தடவிவர, மூட்டு வீக்கங்கள் உள்ளிட்ட வீக்கங்கள் மறையும். ஆறாத புண்களுக்கு, தொட்டால்சிணுங்கி சாற்றை இட்டு, அதன் மேல் நசுக்கிய தொட்டால்சிணுங்கி இலைகளை வைத்து கட்டிவர, புண்கள் ஆறும். ஆசனப்புண்களும் குணமாகும். பெண்மணிகளின் மார்பக வீக்கத்தையும் சரிசெய்யும் ஆற்றல்மிக்கத

வாதம் குணமாக :

தொட்டால்சிணுங்கி இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, அதை இளஞ்சூட்டில் இடுப்பின் பின்புறம் சிறிது சிறிதாக ஊற்றிவர, இடுப்பு வலி குணமாகும்.
தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து, குளங்களில் கிடைக்கும் களிமண்ணுடன் சேர்த்து வாத வீக்கம் எனப்படும், மூட்டு, இடுப்பு, கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கங்களில் தடவி வர, அவை நீங்கும்.

மாத விடாய் :

தொட்டால்சிணுங்கி இலைகளை சேகரித்து, இலைகளோடு, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கலந்து அரைத்து, பெண்கள் மோரில் கலந்து பருகிவர, பெண்களுக்கு மாத விலக்கு சமயங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு போன்றவை குணமாகும்.

தேமல் படை போன்றவை நீங்க

தொட்டால்சிணுங்கி இலைச்சாறு எடுத்து, அந்தச் சாற்றை தேமல் படை மீது தடவி வர, நெடுநாட்களாக இருந்து மனதளவில் துன்பம் தந்துகொண்டிருந்த அவை எல்லாம் மறையும்.

தொட்டால்சிணுங்கி சட்டை.....

இந்திய மாணவர்களின் தயாரிப்பான இந்த சட்டை, சிறந்த உயிரியல் தொழில்நுட்ப ஆடைத்தயாரிப்பாக, ஐரோப்பிய ஆடை வடிவமைப்பு சங்கத்தின் வெள்ளி விருதை வென்றதாகும்.

தாவரங்கள் பொதுவாக கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும், இதுதான் மனிதனுக்கு சுவாசிக்க பயனாகிறது, இந்த வகையில் ஒரு சிறந்த ஆக்சிஜன் வெளிப்பெருக்கியாக திகழ்கிறது, தொட்டால்சிணுங்கி. எனவே, இந்தச் செடியின் இலைகளுடன் பருத்தி நூலை இணைத்து அசாமில் உள்ள ஐஐடி மாணவர் ஆடை வடிவமைப்பு பேராசிரியர் ஒருவருடன் இணைந்து, இந்த உயிரியல் சட்டையை உருவாக்கியுள்ளார்.

என்ன ஸ்பெசல் இந்த சட்டையில்?

தொட்டால்சிணுங்கி ஆடை கால சூழ்நிலைக்கேற்ப வெளிப்புற தன்மைக்கு ஏற்ற வகையில் மாறும் தன்மைமிக்கது. சுவாசிக்க ஆக்சிஜன் குறைவாக உள்ள இடங்களில், அதனை சரிசெய்து மனிதனுக்கு ஆக்சிஜனை சீராக வழங்கும் ஆற்றல்மிக்கது. வியர்வையில் அதிகம் சட்டையெல்லாம் நனைந்துவிடும் பாதிப்புள்ளவர்கள் எல்லாம், இந்த சட்டையை அணிந்தால், வியர்வை பாதிப்புகள் விலகிவிடும்.


Saturday, 16 September 2017

Nahaisuvai

*வெளியே போகும்போது   கணவன் சந்தோஷமா இருக்கிறான்னா.....*

*ஒண்ணு மனைவி வரமா இருக்கனும் இல்ல வராம இருக்கனும்*

😤😤😤😤😤😤😤


Friday, 21 April 2017

Nahaisuvai

என்னதான் ஊருக்கே கேக்குறமாதிரி
குறட்டை  விட்டாலும்
அத நம்ம காதால கேட்க முடியாது!


Nahaisuvai

ஊசி குத்தினா ஏன் ரத்தம் வருது? தன்னை குத்தினது யாருன்னு பாக்கவருது


Nahaisuvai

கோழி ஏன் முட்டை போடுது? ஏன்னா அதுக்கு
1 2 3 போடத்தெரியாது.